இங்கிலாந்து துணை பிரதமர் டொமினிக் ராப் ராஜினாமா!

இங்கிலாந்து துணை பிரதமர் டொமினிக் ராப் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இங்கிலாந்து துணை பிரதமராக இருப்பவர் டொமினிக் ராப். இவர் தனது துறை சார்ந்த அதிகாரிகளிடம் மரியாதைக் குறைவாகவும், கொடுமைப்படுத்தும் வகையிலும் நடந்து…

இங்கிலாந்து துணை பிரதமர் டொமினிக் ராப் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இங்கிலாந்து துணை பிரதமராக இருப்பவர் டொமினிக் ராப். இவர் தனது துறை சார்ந்த அதிகாரிகளிடம் மரியாதைக் குறைவாகவும், கொடுமைப்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த நவம்பர் மாதத்தில் தனியாக அதிகாரி நியமிக்கப்பட்டு அலுவலக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதையும் படியுங்கள் : யானைகளைக் ’கொல்லும்’ மனிதர்கள்…. அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்கள் – மோதலுக்கான காரணம் என்ன?

அந்த விசாரணையின் அறிக்கை, பிரதமர் ரிஷி சுனக்கிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள விபரங்கள் குறித்து தகவல் வெளியாவதற்கு முன்பாகவே துணை பிரதமர் டொமினிக் ராப் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் ரிஷி சுனக்கிற்கு எழுதியுள்ள கடிதத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதன்படி விசாரணைக்கு அழைப்பு விடுத்ததாகவும், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவி விலகுவேன் என தாம் கூறியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ள அவர், தனது வார்த்தையை காப்பாற்றும் வகையில் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.