பொன்னியின் செல்வன் படத்தில் நான் ஒரு அங்கமாக இருந்ததில் மகிழ்ச்சி என்று, படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி கூறினார்.
மணிரத்னத்தின் கனவுப் படமான ‘பொன்னியின் செல்வன்’படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை லைகா புரொடெக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் ஜெயரம் ரவி, கார்த்தி, த்ரிஷா, நாசர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கலந்து கொண்டனர்.
இது குறித்து நடிகர் கார்த்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பல ஆண்டுகள் தமிழ் சினிமாவில் எதிர்பார்த்து வந்த ஒரு தருணம். நானும் ஒரு அங்கமாக இருப்பது மகிழ்ச்சி. பல படங்கள் வேலை பார்த்ததை விட, இந்த படத்தில் வேலை பார்க்கும் போது ஷூட்டிங் ஸ்பாட் உள் மட்டுமே கவனம் இருந்தது. படத்தில் எந்த கதாப்பாத்திரமும் அவ்வளவு சுலபமாக எடுத்து கொள்ள கூடாது. எல்லாமே சிறந்த கதாப்பாத்திரம் தான். பல கற்பனை கதாபாத்திரங்கள் மற்றும் பல நிஜ கதாபாத்திரங்கள் இருந்தன. மணிரத்தினம் அவர்களின் பார்வை மற்றும் வடிவமைப்பு சிறப்புமிக்க வகையில் அமைந்துள்ளது. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நான் தூதுவனாக தான் நடித்தேன், நீங்கள் அந்த படத்தை இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை புரிந்துகொண்டு வந்து பேசுங்கள் என்று கூறினார்.