உயர் நீதிமன்ற மதுரைக் கிளை துணை சொலிசிட்டர் ஜெனரல் நியமனம்

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் துணை சொலிசிட்டர் ஜெனரலாக வழக்கறிஞர் கே. கோவிந்தராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் சென்னை உயர் நீதிமன்றம் சென்னையில் இயங்கி வருகிறது. உயர் நீதிமன்ற கிளை மதுரையில் இயங்கி வருகிறது.…

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் துணை சொலிசிட்டர் ஜெனரலாக வழக்கறிஞர் கே. கோவிந்தராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் சென்னை உயர் நீதிமன்றம் சென்னையில் இயங்கி வருகிறது. உயர் நீதிமன்ற கிளை மதுரையில் இயங்கி வருகிறது. இந்நிலையில் மத்திய சட்டத்துறை அமைச்சகம் ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதில், “ஜனாதிபதி அவர்களால், வழக்கறிஞர் கே. கோவிந்தராஜன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் துணை சொலிசிட்டர் ஜெனரலாக நியமனம் செய்யப்படுகிறார். இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிற தேதியில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு அவர் இந்தப் பதவியில் இருப்பார்.” என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: கைதி ரீமேக்காக உருவாகியுள்ள ‘போலா’ – கொடியசைத்து லாரிகளை தொடங்கிவைத்த அஜய் தேவ்கன்!

ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் 17ம் தேதி உச்ச நீதிமன்றம் கொலிஜியம் கூட்டம் நடைபெற்றது. அதில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக 8 பேரை நியமனம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.