தன் மனைவி பிரமிளா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு சோஹோ நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்ரீதர் வேம்பு ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.
உலகின் முன்னனி நிறுவனமான சோஹோ நிறுவனத்தின் நிறுவனரான ஸ்ரீதர் வேம்பு மீது அவரது மனைவி பிரமிளா சீனிவாசன் பல்வேறு புகார்களை கூறியிருந்தார். இந்த விவகாரத்தை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில், நானும் எனது கணவர் ஸ்ரீதர் வேம்பும் 29 ஆண்டுகள் ஒன்றாக இருந்தோம். 2020ம் ஆண்டு தமிழ்நாடு திரும்பிய பிறகு அவர் என்னையும் மகனையும் கைவிட்டுவிட்டார். என் மகனுக்கு ஆட்டிசம் பாதிப்பு, உடல் ரீதியாக சில பாதிப்புகளும் உள்ளன. அவர், எங்களை கவனிக்கவில்லை என்று குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு டிவிட்டர் மூலம் சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிலளித்துள்ளார். அதில், “ எனது பிஸினஸ் வாழ்க்கையை விட தனிப்பட்ட வாழ்க்கை சோகம் நிறைந்தது. எனது மகனுக்கு ஏற்பட்ட ஆட்டிசம் பாதிப்பு எங்கள் வாழ்க்கையை சிதைத்தது. தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு மனச் சோர்வடையை செய்தது. நானும் எனது மனைவியும் 15 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்டிசத்துக்கு எதிராக போராடி வருகிறோம். பிரமிளா ஒரு நல்ல அம்மா. எங்கள் மகனுக்கு ஏற்பட்டுள்ள ஆட்டிசம் பாதிப்பை குணப்படுத்த வேண்டும் என்பதே அவரின் முக்கிய நோக்கம்.
அண்மைச் செய்தி :கைதி ரீமேக்காக உருவாகியுள்ள ‘போலா’ – கொடியசைத்து லாரிகளை தொடங்கிவைத்த அஜய் தேவ்கன்!
சோஹோ நிறுவனத்தில் என்னுடைய உரிமை குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார். நிறுவனத்தில் உள்ள எனது பங்குகளை நான் வேறு யாருக்கும் மாற்றியதில்லை.
நான் பிரமிளாவையும் எனது மகனையும் பொருளாதார ரீதியாக கைவிட்டுவிட்டேன் என்று சொல்வதில் உண்மையில்லை. அவர்கள் என்னை விட நல்ல வசதியாக வாழ்கிறார்கள். நான் எப்போதும் பிரமிளாவையும் என் மகனையும் ஆதரித்து வருகிறேன். நான் வாழும் வரை அவர்களுக்கு ஆதரவாக இருப்பேன். இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் தன் மீதான மனைவியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ளார்.







