அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகியுள்ள ‘போலா’ படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தொடங்கியுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் கார்த்தி கூட்டணியில் உருவாகி ஹிட் அடித்த திரைப்படம் ‘கைதி’. ஒரே நாளில் நடக்கும் சம்பவங்களை வைத்து திரில்லர்-ஆக்ஷன் கதையாக இந்தப் படம் அமைந்திருக்கும். ‘கைதி’ படம் இந்தியில் ‘போலா’ என்று ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த ரீமேக் திரைப்படத்தில் அஜய் தேவ்கன் நடித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தப் படம் முழுக்க முழுக்க 3-டியில் உருவாகி உள்ளது. அதுமட்டுமல்லாமல் விஎப்எக்ஸ் காட்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால் பாலிவுட்டில் பல்வேறு எதிர்பார்ப்புகளை இந்தப் படம் ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இந்தப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.
அண்மைச் செய்தி : நீட் விலக்கு மசோதா – எம்.பி. சு.வெங்கடேசனுக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்
`போலா’ திரைப்படம் வரும் மார்ச் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. எனவே இந்தப் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை படக்குழு தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் போஸ்டர்கள் அமைந்த லாரிகளை நடிகர் அஜய் தேவ்கன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.