நாடு முழுவதும் மோடிக்கு எதிர்ப்பலை உருவாகியுள்ளது – வைகோ பேட்டி!

பிரதமர் மோடிக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பலை உருவாகியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆளுநர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்கக்கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில்…

பிரதமர் மோடிக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பலை உருவாகியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்கக்கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு பங்கேற்று தனது முதல் கையெழுத்தையிட்டு இயக்கத்தை துவக்கி வைத்துள்ளார்.

இதன் ஒரு பகுதியாக, சென்னை அண்ணா அறிவாலயத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், மதிமுக அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ், பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ, துணைப் பொதுச் செயலாளர்கள் மல்லை சத்யா, ஆ.கு.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.ராஜேந்திரன், டாக்டர் ரொஹையா சேக் முகமது ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கையெழுத்து பெற்றனர்.

சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய வைகோ, மதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினோம். அதற்காக கையெழுத்து இயக்கத்தையும் தொடங்கியுள்ளோம். இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கையெழுத்து பெற்றுள்ளோம்.

மீண்டும் மோடி வராத அளவிற்கு சூழல் உருவாகி வருகிறது. நாடு முழுவதும் எதிர்ப்பலை உருவாகியுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு இடத்தில் கூட பாஜக அணி வெற்றி பெறாது. தமிழ்நாட்டில் பாஜகவை ஒழித்துவிடுவார்கள் மக்கள். எத்தனை முறை படையெடுத்தாலும், தமிழ்நாட்டிற்கு வந்தாலும் அரசியலில் பாஜக வெற்றி பெற முடியாது. ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டிற்கே கேடு. அமைச்சர் செந்தில் பாலாஜி விஷயத்தில் அமலாக்கத்துறையினர் மனிதாபிமானத்துடன் பேச வேண்டும். மனிதநேயமற்ற முறையில் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளனர் என கூறினார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.