கோவை ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

கோவை ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையில் ரூ. 8.40 லட்சம் றிமுதல் செய்யப்படுள்ளது. மேலும், முதன்மை உதவியாளரிடம் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டனர். கோவை பேரூர் பச்சாபாளையம் பகுதியில் உள்ள…

கோவை ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையில் ரூ. 8.40 லட்சம் றிமுதல் செய்யப்படுள்ளது. மேலும், முதன்மை உதவியாளரிடம் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டனர்.

கோவை பேரூர் பச்சாபாளையம் பகுதியில் உள்ள ஆவின் பால் கம்பெனி நிறுவனத்தில் பணி நிரந்தரம் செய்யவும், பத்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருபவர்களுக்கு வழங்கப்படும் அரியர் பணம் வழங்க உயர் அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகார் அடிப்படையில், நேற்று மாலை 6.30 மணியளவில் லஞ்சம் ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி திவ்யா தலைமையில், ஆய்வாளர் பரிமளா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.

அண்மைச் செய்தி: ‘செங்கோட்டை – திருநெல்வேலிக்கு கூடுதல் ரயில் இயக்கம்’

இந்த திடீர் ஆய்வின் போது கோவை ஆவின் நிறுவனத்தின் முதன்மை உதவியாளராக பணியாற்றி வரும் கிருஷ்ணமூர்த்தி என்பவரது காரில் ரூ.5.90 லட்சம் மற்றும் அவரது அலமாரியில் இருந்து ரூ.2.50 லட்சம் கணக்கில் வராத பணம் இருந்தது. இதனை பறிமுதல் செய்த லஞ்சம் ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து கிருஸ்ணமூர்த்தி மற்றும் பணம் கொடுத்தவர்களிடமும் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.