செங்கோட்டை – திருநெல்வேலிக்கு கூடுதல் ரயில் இயக்கம்

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு செங்கோட்டை – திருநெல்வேலிக்கு கூடுதல் ரயில் இயக்கம் தொடங்கியுள்ளது. செங்கோட்டையில் இருந்து தென்காசி, பாவூர்சத்திரம், கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி வழியாக திருநெல்வேலிக்கு காலையிலும், திருநெல்வேலியில் இருந்து செங்கோட்டைக்கு மாலையிலும்…

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு செங்கோட்டை – திருநெல்வேலிக்கு கூடுதல் ரயில் இயக்கம் தொடங்கியுள்ளது.

செங்கோட்டையில் இருந்து தென்காசி, பாவூர்சத்திரம், கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி வழியாக திருநெல்வேலிக்கு காலையிலும், திருநெல்வேலியில் இருந்து செங்கோட்டைக்கு மாலையிலும் இயக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, இன்று முதல் ரயில் இயக்கம் தொடங்கியது. கொரோனா ஊரடங்குக்கு முன்பு செங்கோட்டையிலிருந்து திருநெல்வேலிக்கு, காலை 06.50 மணிக்கும், 10.15 மணிக்கும், மதியம் 02.40 மணிக்கும், மாலை 05.50 மணிக்கும் இயக்கப்படும்.

அதேபோல, திருநெல்வேலியில் இருந்து செங்கோட்டைக்கு காலை 07.00 மணிக்கும், 09.20 மணிக்கும், மதியம் 01.50 மணிக்கும், மாலை 06.25 மணிக்கும், நான்கு ஜோடி பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டது. ஆனால், தற்போது திருநெல்வேலியில் இருந்து காலை 7 மணிக்கும், செங்கோட்டையில் இருந்து மாலை 05.50 மணிக்கும் ஒரு ரயில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

 

அண்மைச் செய்தி: ‘‘ஏழைகளுக்கு உதவி செய்வது குறித்து யோசிப்போம்’ – 10 கோடி பரிசு பெற்ற குமரி அரசு மருத்துவர்’

காலை 06.50 மணிக்கு செங்கோட்டையில் இருந்து திருநெல்வேலிக்கு புறப்படும் ரயிலும், திருநெல்வேலியில் இருந்து செங்கோட்டைக்கு மாலை 06.25 மணிக்கு புறப்படும் ரயிலும் பொதுமக்களின் வரவேற்ப்பை பெற்ற ரயில்களாக உள்ளன. இந்த ரயிலை தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கூடுதலாக இயக்கப்பட்ட ரயிலை வரவேற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.