ஹோலி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

ஹோலி பண்டிகையை முன்னிட்டு வட மாநில தொழிலாளர்கள் பயனடையும் வகையில் சிறப்பு ரயிலை  தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஹோலி பண்டிகைக்காக வடமாநிலங்களில் உள்ள தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்ல விரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக சிறப்பு…

ஹோலி பண்டிகையை முன்னிட்டு வட மாநில தொழிலாளர்கள் பயனடையும் வகையில் சிறப்பு ரயிலை  தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஹோலி பண்டிகைக்காக வடமாநிலங்களில் உள்ள தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்ல விரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில் ( 06049 ) கோயம்புத்தூரில் இருந்து பாட்னாவுக்கு மார்ச் 5 ஆம் தேதி இயக்கப்படுகிறது.

அதே போல் மார்ச் 5 ஆம் தேதி கோயம்புத்தூரில் இருந்து 20.45 மணிக்கு புறப்பட்டு, கோயம்புத்தூர் சந்திப்பு  வழியாக மார்ச் 7 ஆம் தேதி (ஹோலி பண்டிகை நேரத்தில்) காலை 07.00 மணிக்கு பாட்னாவை சென்றடையும்.

இதையும் படியுங்கள் : வதந்தியால் சொந்த ஊர் திரும்பும் வடமாநில தொழிலாளர்கள் – விழிப்புணர்வு ஏற்படுத்த தொழிலதிபர்கள் கோரிக்கை 

திருப்பூர், ஈரோடு , சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, மற்றும் தெற்கு ரயில்வேயில் பெரம்பூர், கூடூர், விஜயவாடா போன்ற பல்வேறு முக்கிய ரயில் நிலையங்கள் வழியாக,
விஜயகிராமம், குர்தா சாலை, புவனேஸ்வர், கட்டாக், பாலசோர், மிட்னாபூர், அட்ரா
அசன்சோல் ஜென், சித்தரஞ்சன் மற்றும் பாட்னாவை அடைய ராஜேந்திர நகரங்கள் வழியாக சென்றடையும்.

இந்த ரயிலில் ஸ்லீப்பர் மற்றும் 3ஏசி  இல் முன்பதிவு செய்யப்பட்ட  பெட்டிகள்,  மற்றும் 8 முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் இருக்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.