கேரளா : இருசக்கர வாகனத்தில் வந்த பள்ளி மாணவர் பேருந்திற்கு அடியில் சிக்கி உயிரிழப்பு

கேரள மாநிலம் மலப்புரம் அருகே பேருந்திற்கு அடியில் சிக்கி பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் செம்மந்தலப்பாறைப் பகுதி சாலையில் இளைஞர் ஒருவர் அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தார்.…

கேரள மாநிலம் மலப்புரம் அருகே பேருந்திற்கு அடியில் சிக்கி பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் செம்மந்தலப்பாறைப் பகுதி சாலையில் இளைஞர் ஒருவர் அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தார். வளைவு பகுதிக்கு அருகில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சிறிது தூரம் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு, எதிரே வந்த பேருந்திற்கு அடியில் சிக்கியது. இதில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையும் படியுங்கள் : வதந்தியால் சொந்த ஊர் திரும்பும் வடமாநில தொழிலாளர்கள் – விழிப்புணர்வு ஏற்படுத்த தொழிலதிபர்கள் கோரிக்கை 

இதுகுறித்து தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இளைஞரின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், விபத்தில் சிக்கிய நபர், முன்னியூரைச் சேர்ந்த 12ம் வகுப்புப் படிக்கும் மாசீன் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்து குறித்த சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி உள்ளது.

– கே.ரூபி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.