முக்கியச் செய்திகள் தமிழகம்

அண்ணாமலை நீட் தேர்வை எதிர்க்கிறாரா ? அமைச்சர் பொன்முடி கேள்வி

நீட் தேர்வை பொறுத்தவரை அண்ணாமலை ஆதரிக்கிறாரா, எதிர்க்கிறாரா என்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டும் கல்லூரி விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி கேள்வி  

சிவகங்கை மாவட்டம் சிங்கம் புணரி அருகே பூலாங்குறிச்சியில் நடைபெற்ற கல்லூரி
விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர்  பொன்முடி பங்கேற்று  பின் செய்தியாளர்களைச் சந்தித்த கூறியதாவது , அண்ணாமலை தமிழக அரசோடு சேர்ந்து நீட் தேர்வு ரத்து செய்ய குரல் கொடுக்க வேண்டும் என அன்போடு வேண்டுகிறேன் என்று தெரிவித்தார்.தொடர்ந்து  நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்று எந்த மாணவர்களும் தற்கொலை செய்து கொள்வது தவிர்க்கப்பட வேண்டும். எந்தத் துறையில் படித்தாலும் நான் முதல்வன் என்ற எண்ணத்துடன் படிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஹிந்தியில் நீட் தேர்வு எழுதுபவர்கள் மட்டுமே தேர்வாகி வருகின்றனர். தமிழில் நீட் தேர்வு எழுதுபவர்கள் தேர்ச்சி பெறுவது கடினம் என்பதால் நீட் தேர்வை எதிர்த்து வருவதாகவும் கூறினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இடப்பற்றாக்குறைவால் கிராமப்புற மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அரசு கல்லூரிகளில் 20% இடங்களை உயர்த்திக்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், ஏழை மாணவர்கள் தங்கிப் படிக்க வசதியாக இருக்கும் படி அரசு கல்லூரிகளின் விடுதிகள் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் பிரணாப் முகர்ஜி மகன்

Gayathri Venkatesan

முன்னணி நடிகர் நடிகைகள் வாக்களித்தனர்!

Gayathri Venkatesan

தமிழ்நாட்டின் போட்டி உலக நாடுகளுக்கு மத்தியில் இருக்க வேண்டும்; முதலமைச்சர்

EZHILARASAN D