திருடிய இருசக்கர வாகனத்திலேயே ஊர் சுற்றி வந்த இளைஞரை வாகனத் தணிக்கையில்
இருந்த போலீஸார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகனங்கள் மருத்துவமனை வளாகத்தில் இருந்து
திருடுபோய் உள்ளது என்று வாலாஜாபேட்டை போலீசருக்கு புகார் வந்தது.
இதையடுத்து மருத்துவமனைக்கு சென்ற போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி
கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது கேமராவில் இளைஞர் ஒருவர் இருசக்கர
வாகனத்தின் மீது அமர்ந்தபடி திருடுவது போன்ற காட்சி கேமராவில் பதிவாகி உள்ளதை
கண்டுபிடித்தனர்.
மேலும் சிசிடிவி கேமராவின் காட்சிகளை அடிப்படையில் கொண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் வாலாஜாபேட்டை தேசிய நெடுஞ்சாலை உள்ள வீ.சி.மோட்டூர் பகுதியில் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது நெடுஞ்சாலையில் இருசக்கர வாகணத்தில் அதிவேகமாக
வந்த இளைஞரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த இளைஞர் வேலூர் மாவட்டம், சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த சலீம் என்பவரின் மகன் 20 வயதான சல்மான் எனவும் இவர் வாலாஜாபேட்டையில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகணத்தை திருடியது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு பகுதியில் திருடப்பட்டு வேலூரில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 3 வாகனங்களை மீட்ட போலீஸார் சல்மான் மீது வழக்கு பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.








