கடலில் மாயமான நாகையை சேர்ந்த 9 மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மக்களவை உறுப்பினர் கனிமொழி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகையில், நடுக்கடலில் படகு கவிழந்து மாயமான நாகையை சேர்ந்த 9 மீனவர்களை தேடும் பணியில், கடற்படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் 50ஆயிரம் ரூபாய் நிவாரணதொகை முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.







