தேர்தலுக்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கடி கொள்கைகளை மாற்றி கொள்வதாக திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி விமர்சனம் செய்தார்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் வாகன பரப்புரையில் பேசிய அவர், “அதிமுக ஆட்சியில் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு இன்றி தவித்து வருகிறார்கள். விவசாயிகள் எதிர்த்து போராடும் வேளாண் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விட்டு, தன்னை விவசாயி எனக்கூறி மக்களை ஏமாற்றுகிறார். இதேபோன்று குடியுரிமை சட்டத்தை ஆதரித்து விட்டு, தற்போது தேர்தலுக்காக அதனை திரும்ப பெற வலியுறுத்தப்படும் என அதிமுக தேர்தல்அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது குறித்தும் கனிமொழி விமர்சனம் செய்தார்.







