முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம்

கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்

ஆந்திராவில் ரயில் நிலையத்தில் காத்திருந்த கர்ப்பிணியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர பிரதேசத்தின் பபட்லா மாவட்டத்தில் ரிபள்ளி என்ற இடத்தில் ரயில் நிலையம் ஒன்று உள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு கர்ப்பிணி ஒருவர் தனது கணவர் மற்றும் 3 குழந்தைகளோடு அந்த ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்துக்கிடந்தனர். பிரகாசம் மாவட்டத்தில் வசித்து வரும் அந்த குடும்பம் வேலை தேடி குண்டூரில் இருந்து கிருஷ்ணா மாவட்டத்திற்கு செல்வதற்காக அங்கு வந்திருந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இரவு வெகுநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால், நடைமேடையில் இருந்த இருக்கையில் அவர்கள் உறங்கினர். இதனையடுத்து, நள்ளிரவில் ஒரு சிறுவன் உள்பட 3 பேர் கொண்ட கும்பல் போதையில் அங்கு வந்துள்ளனர். அவர்கள் தூங்கி கொண்டிருந்தவர்களை எழுப்பி அந்த கணவரை அடித்து, தாக்கியுள்ளனர். இதனை அவரது கர்ப்பிணி மனைவி தடுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த 3 பேரும் கணவரை விட்டு, ரயில் நிலையித்தில் இருந்து கர்ப்பிணியை தரதரவென்று இழுத்து சென்று அருகேயிருந்த புதர் பகுதிக்கு சென்றனர்.

அந்த இடத்திலிருந்து தப்பிய கணவர், ரயில்வே போலீசாரின் உதவியை தேடி சென்றுள்ளார். ஆனால் ரயில்வே போலீசார் கதவை திறக்காதகால் அருகில் உள்ள காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். அதற்குள் போதையில் வந்திருந்த மூன்று பேரும் கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இதனையடுத்து அங்கு வந்த போலீசார் படுகாயமடைந்த கர்ப்பிணியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போதையில் கர்ப்பிணி என்றும் பாராமல் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தேவர் குருபூஜை: அதிமுக-வில் தங்கக்கவசத்தை பெறப்போவது யார்?

EZHILARASAN D

குஜராத்தில் ஆட்சியை கைப்பற்ற போவது யார்? கருத்து கணிப்புகள் சொல்வது இதுதான்…

G SaravanaKumar

கட்டடம் இடிந்து ஐடி பெண் ஊழியர் உயிரிழந்த விவகாரம் – பணியை உடனடியாக நிறுத்த சென்னை மாநகராட்சி உத்தரவு

Yuthi