முக்கியச் செய்திகள் செய்திகள்

தளபதி 66 குறித்து நறுக் அப்டேட் கொடுத்த சரத்குமார்!

அனைத்து ரசிகர்களையும் திருப்திபடுத்தும் விதமாக தளபதி 66 படம் அமையும் என்று நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து விஜயின் 66ஆவது படத்தை எதிர்நோக்கியுள்ளனர் அவரது ரசிகர்கள். இந்நிலையில், விஜயின் அடுத்த படத்தை இயக்குகிறார் இயக்குநர் வம்சி. இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ஒரு சில பாடல்களின் பதிவு நிறைவு பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இன்னும் பெயரிடப்படாத இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில், சரத்குமார், ஷாம் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

இரண்டு கதாப்பாத்திரத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இதில், ஒரு விஜய்க்கு ராஷ்மிகா மந்தனா ஜோடி என்றும், மற்றொரு கதநாயகிக்கான தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஜூன் 22ஆம் தேதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திரைப்படத்தில் விஜய்க்கு தந்தையாக நடிக்கும் சரத்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தளபடி 66 படப்பிடிப்பில் நான் இந்த மாதம் இணைகிறேன். ஆகஸ்ட் மாதத்துக்குள் ஷூட்டிங் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கிறேன். தளபதி 66 படத்தின் கதை மிகவும் பவர்ஃபுல்லானது. அனைத்து ரசிகர்களையும் ஈர்க்கும்படியாக இந்த ஸ்கிரிப்ட் அமைந்துள்ளது. விஜயுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மியான்மரில் ராணுவ ஆட்சி அமைந்தது தவிர்க்கவியலாதது: ராணுவ தளபதி

Jayapriya

திருத்தணி முருகன் கோயிலில் 20 நாட்களில் ரூ.2 கோடி காணிக்கை வசூல்!

Jayasheeba

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இனி முகக்கவசம் கட்டாயம்

Web Editor