அம்பத்தூரில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் குடும்ப தகராறின் போது, தன்னுடன் வசித்து வந்த வடமாநில பெண்ணை அடித்து கொலை செய்தார். தகவலறிந்து சென்ற போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அம்பத்தூர் நேருதெருவில் வசித்து வருபவர் ஹரிஷ் பிரம்மா(26) இவரும் உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த கணவரை பிரிந்தவருமான ரஷீயா கத்துனா(22) என்ற பெண்ணும் அம்பத்தூரில் வாடகை வீட்டில் ஒன்றாக வசித்து வருகின்றனர். ஹிரிஷ் பிரம்மா பட்டரைவாக்கத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், கடந்த மூன்று மாத காலமாக ஹரிஷ் பிரம்மாவுக்கும், ரஷ்யாகத்துனா ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று மாலையும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில், ஹரிஷ் பிரம்மா, ரஷியா கத்துனாவை சரமாரியாக தாக்கியுள்ளார்.
கத்துனாவுக்கு தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டதால் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து கீழே விழுந்தார். பின்னர் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது, கத்துனா மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனே அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்கா அங்கிருந்து கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கத்துனாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
இதையடுத்து, தகவலறிந்து சென்ற அம்பத்தூர் காவல்துறையினர் வீட்டின் அருகே பதுங்கியிருந்த ஹரிஷ் பிரம்மாவை சுற்றி வளைத்து பிடித்து சென்றனர்.







