ஆந்திராவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக நாளை முதல் அடுத்த 14 நாட்களுக்கு பகுதி நேர ஊரடங்கு அறிவித்து ஆந்திர முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திராவில் இதுவரை 1,43, 178 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அம்மாநிலத்தில் 23,920 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நாளை 5 ஆம் தேதி முதல் 14 நாட்களுக்கு பகுதி நேர ஊரடங்கு ஆந்திராவில் அமல்படுத்தப்படவுள்ளது. நாளை முதல் காலை 6 மணி முதல் 12 மணி வரை கடைகள் அனுமதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். பகுதி நேர ஊரடங்கு நேரத்தில் தேவையான பொருட்களை மக்கள் வாங்கி செல்ல வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். 12 மணிக்கு மேல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.







