ஆந்திராவில் உயிரிழந்த தாயின் உடலை ஆம்புலன்ஸில் ஏற்ற மறுத்ததால் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் உடல்நிலை காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். அதனால் அவரை அப்பகுதியிலுள்ள தனியார் மருத்தவமனைக்கு அவரது மகன் அழைத்து சென்றார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாகவும் சோதனையின் முடிவு வரும்வரை காத்திருப்பதாகவும் கூறியிருந்தார். ஆனால் முடிவு வரும் முன்னரே அந்த பெண் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனால் தன் தாயின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்வார்கள் என்ற நம்பிக்கையில் மருத்துவமனை முன்பு அமர்ந்திருந்தனர். ஆனால், ஆம்புலன்ஸ் எதுவும் கிடைக்காததால், உயிரிழந்த பெண்ணின் மகனும் மருமகனும் இருசக்கர வாகனத்திலேயே அவரை அடக்கம் செய்ய கொண்டு சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.







