மே மாதத்தில் நடைபெற இருந்த அனைத்து நேரடி எழுத்துத் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ள நிலையில், சிபிஎஸ்இ உள்ளிட்ட பள்ளி பொதுத்தேர்வுகள், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மற்றும் நெட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகள் ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், இந்த மாதத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அனைத்து நேரடி எழுத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வுகளை மீண்டும் எப்போது நடத்துவது என்பது குறித்து, வரும் ஜூன் முதல் வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆனால், ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஆன்லைன் தேர்வுகளை கல்வி நிறுவனங்கள் நடத்திக்கொள்ளலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுட்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.