ஆந்திராவில் வீடு தேடி ரேஷன் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி துவக்கிவைத்தார்.
தேர்தலுக்கு முன்னதாக ஜெகன் மோகன் ரெட்டி மாநிலம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டார். ரேஷன் கடை முன்பு பொருட்கள் வாங்குவதற்காக முதியவர்கள், மாற்று திறனாளிகளை நிற்பதைக் கண்டு வேதனை அடைந்த ஜெகன் மோகன் ரெட்டி, வீடு தேடி ரேஷன் பொருட்கள் கொண்டு வரும் திட்டத்தை அறிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன் தொடர்ச்சியாக ஆந்திராவில் நடமாடும் நியாய விலைக் கடைகளை ஜெகன்மோகன் ரெட்டி விஜயவாடாவில் இன்று துவக்கிவைத்தார். ரேஷன் பொருட்கள் வழங்கும் பணிகளில் 9,260 வாகனங்கள் ஈடுபடுகின்றன.
இதன்மூலம் தரமான அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள் வீட்டிலேயே நேரடியாக பெற்றுக்கொள்ளலாம். அரசால் வழங்கப்படும் பொருட்களில் கலப்படம், பதுக்கலைத் தடுத்து பொதுமக்களுக்கு நேரடியாக பொருட்கள் சென்று சேருவதை இது உறுதி செய்யும் என ஆந்திர அரசு கூறுகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ரேஷன் பொருட்கள் வாங்குவதில் இருந்து இத்திட்டம் நிவாரணம் அளிக்கிறது. இதற்காக ஆந்திர அரசுக்கு 830 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.
திட்டத்திற்காக அரசின் வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வேலையில்லா இளைஞர்கள் பயனாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அரசின் 60 சதவிகித மானியத்துடன் 339 கோடி ரூபாய்க்கு புதிய நடமாடும் வாகனங்கள் வாங்கப்பட்டன. 5,81,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு வாகனத்திற்கு அரசு 3,48,600 கோடி ரூபாய் மானியம் அளித்துள்ளது.