பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கிரீமிலேயர் வருமான வரம்பை 15 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கிரீமிலேயர் வருமான வரம்பை 15 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 7ஆம் தேதி மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகவிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். அதன் பிறகு தேசிய அளவில் மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய அரசின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் மாணவர் சேர்க்கை தொடங்கவிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
அதற்கு முன்பாக கிரீமிலேயர் வருமான வரம்பு உயர்த்தப்படாவிட்டால் தகுதியும் திறமையும் உள்ள பிற பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் சேர இயலாது என கூறியுள்ளார். எனவே கிரீமிலேயர் வரம்பை ரூ.15 லட்சம் ஆக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள மருத்துவர் ராமதாஸ், அதன் மூலம் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சமூகநீதியை மத்திய அரசு காக்க வேண்டும என கூறியுள்ளார்







