#AnbaanaFans ரசிகர்களின் அன்பால் எப்போதும் நன்றாக இருப்பேன் – நடிகர் சூர்யா நெகிழ்ச்சி!

கங்குவா’ படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்தில் நடிகர் சூர்யா நூலிழையில் உயிர் தப்பியதாக வெளியான தகவலையடுத்து, வருத்தங்களை பகிர்ந்துகொண்ட தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். சிறுத்தை சிவா…

கங்குவா’ படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்தில் நடிகர் சூர்யா நூலிழையில் உயிர் தப்பியதாக வெளியான தகவலையடுத்து, வருத்தங்களை பகிர்ந்துகொண்ட தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கும் ‘கங்குவா’ படத்தில் சூர்யா நடித்து வருகிறார். மும்பை, கொடைக்கானல், ஹைதராபாத்தில் முதல் மற்றும் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புகள் நடந்து முடிந்தன. தொடர்ந்து சென்னை பூந்தமல்லி அருகே ஈவிபி ஃபிலிம் சிட்டியின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றன. சூர்யாவின் சண்டைக் காட்சிகள் இன்று காலை படமாக்கப்பட்ட போது, 10 அடி உயரத்தில் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த ரோப் கேமிரா அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

இதில் சூர்யா உயிர்தப்பியதாக தகவல் வெளியானது. மேலும், சூர்யாவின் தோள்பட்டையில் லேசாக கேமரா மோதியதாகவும், இதனைத்தொடர்ந்து படப்பிடிப்பு இன்று ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் பெரிதாக பேசுபொருளானது. நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் தங்களது வருத்தங்களை பகிர்ந்துவந்தனர். 

https://twitter.com/Suriya_offl/status/1727671787130106067?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1727671787130106067%7Ctwgr%5Ed6cba1210d014f3511e001681aab1e376bd64951%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.abplive.com%2Fentertainment%2Factor-suriya-expressed-heartfelt-thanks-for-outpouring-get-well-soon-messages-from-fans-after-kanguva-shooting-spot-injury-152134

இந்நிலையில் ரசிகர்களின் அன்பிற்கு சூர்யா நன்றி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் (எக்ஸ்) பதிவில், “ நான் விரைவில் குணமடைய வேண்டுமென தெரிவித்த அன்பான ரசிகர்களுக்கு இதயம் கனிந்த நன்றி. தற்போது நன்றாக இருப்பதாக உணர்கிறேன். உங்களின் அன்பால் எப்போதும் நன்றாக இருப்பேன்” என கூறியுள்ளார். சூர்யாவின் இந்த பதிவால் ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோல ஈவிபி ஃபிலிம் சிட்டியில் இந்தியன் 2 படப்பிடிப்பின் போது, கிரேன் விழுந்து இரண்டு பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.