வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்த முதியவரை கைது செய்து அவரடமிருந்து 100 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள குளந்தான் வளவு பகுதியில் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி சுற்றுவட்டார பொது மக்களுக்கு விற்பனை செய்து வருவதாக தொளசம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் அங்கு சென்ற எஸ்ஐ ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சென்று மாணிக்கம் என்பவரின் வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டின் நடுவே குழி வெட்டி அதில் பழங்கள், வெல்லம், கடுக்காய், உள்ளிட்ட பொருட்களை கொண்டு சாராயம் தயாரிக்க ஊரல் போடப்பட்டிருந்தார். அதை மண் கொண்டு மூடப்பட்டு அதன் மேல் கல்லை வைத்திருந்தார், அதன் மேல் சணல் சாக்கை விரித்து வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் கொட்டி வைத்திருந்தார். இதனை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதைத்தொடர்ந்து சாராயம் சாட்சி விற்பனை செய்த மாணிக்கம் என்பவரை கைது செய்தனர். மேலும் ஒரு சாராயம் காய்ச்சுவதற்காக போடப்பட்டிருந்த 100 லிட்டர் ஊரல்களை போலீசார் அளித்து கைது செய்யப்பட்ட முதியவர் மாணிக்கத்தை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.







