அதிமுக ஆட்சியில்தான் போதைப் பொருள் பயன்பாடு அதிகரிப்பு-அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

கடந்த பத்து ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தான் தமிழகம் முழுவதும் போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர்…

கடந்த பத்து ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தான் தமிழகம் முழுவதும் போதைப்
பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள்
நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற போதைப் பொருட்கள் தடுப்பு மாநாட்டிற்கு பிறகு அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் கடந்த 10 ஆண்டுகளில் போதைப் பொருள்
நடமாட்டம் அதிகரித்துள்ளது. அதிமுக ஆட்சியில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை
கண்டும் காணாமல் ஆட்சியாளர்கள் விட்டுவிட்டார்கள்.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பிறகு போதைப் பொருட்கள் நடமாட்டத்திற்கு எதிராக
எடுக்கப்பட்டு நடவடிக்கைகளை அனைவரும் அறிவீர்கள். மலைப் பகுதிகளில்
கஞ்சா பயிரிடும் நிலை முழுவதும் கட்டுப்படுதப்பட்டுள்ளது.

மேலும் 2021 ஜூன் மாதம் முதல் 9.19 கோடி மதிப்பிலான குட்கா மற்றும் பான் மசாலா
பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் 44 கடைகளுக்கு சீல்
வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் 2013 ஆம் ஆண்டு முதல் 75
கடைகளுக்கே மட்டும்தான் சீல் வைகப்பட்டிருந்தது.கடந்த ஆட்சியின் மெத்தன போக்கே
போதை பொருள் பயன்பாடு அதிகரிக்க காரணம். 

போதைப் பொருள் பயன்பாட்டைத் தடுப்பது ஒரு சவால் நிறைந்த பணி தான். போதைப்
பொருள் பயன்பாட்டுக்கு எதிராக நாளை ஒரே நாளில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட
மாணவர்கள் போதைக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க உள்ளனர் என்றார் மா.சுப்பிரமணியன்.

மேலும் நேரடியாக அரசசே விற்கும் மது விற்பனையை குறைக்க நடவடிக்கை
எடுக்கப்படுமா என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு டாஸ்மாக் உள்ளிட்டவை இல்லாவிட்டால் கள்ளச்சாராயம் அதிகரித்து விடும். தற்போது தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையே தொடங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.