முக்கியச் செய்திகள் தமிழகம்

தீண்டாமைக்கு முடிவு; வேங்கைவயலில் அனைத்து தரப்பு மக்களும் சமத்துவ வழிபாடு

புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் உள்ள கோயிலில் அமைச்சர், மாவட்ட ஆட்சியர்  முன்னிலையில் அனைத்து தரப்பு மக்களும் சமத்துவ வழிபாடு நடத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளனூர் அருகே வேங்கைவயல் பகுதியில் 50க்கும் மேற்பட்ட பட்டியல் இன மக்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியில், மனிதக்கழிவு கலந்திருந்தது. இததனை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதி செய்தனர். இது தொடர்பான புகார்படி, வெள்ளனூர் போலீசார் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து அப்பகுதியை ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட எஸ்.பி., வந்திதா பாண்டே ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது அப்பகுதி மக்கள் டீக்கடையில் இரட்டை டம்பளர் முறை இருப்பதாகவும், அய்யனார் கோவிலுக்குள் எங்களை அனுமதிக்கவில்லை எனவும் புகார் செய்தனர். இதைதொடர்ந்து, உடனடியான மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, பட்டியல் இன மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்று வழிபட செய்தார். மேலும் அங்குள்ள டீக்கடைகயில் ஆய்வு செய்து, விசாரணை நடத்தினார். தொடர்ந்து தீண்டாமை குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ் அப் எண்ணையும் அறிவித்தார்.

மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜாதி மத இன வேறுபாடு இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் கோயில்களில் ஜாதி ரீதியாக அனுமதி மறுக்கப்பட்டாலோ, தேநீர் கடைகளில் இரட்டை குவளை முறை பின்பற்றப்பட்டாலோ, முடி திருத்தங்களில் ஜாதியை வேறுபாடு காணப்பட்டாலோ, சட்ட ரீதியான கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்தார்.

இந்நிலையில், நேற்று வேங்கைவயல் பகுதியில் உள்ள இரு சமுதாய மக்களிடமும் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடத்தப்பட்ட சமரச பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு, கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை ஆகியோர் முன்னிலையில் பட்டியல் இன மக்களை ஊர்வலமாக அழைத்து வந்து கோவிலில் வழிபாடு நடத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழகத்தில் மேலும் 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள்: சுகாதார அமைச்சர் கோரிக்கை

Web Editor

விழுப்புரத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று அறிகுறி: தொடர் கண்காணிப்பில் மருத்துவ குழு

Arivazhagan Chinnasamy

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை திடீர் உயர்வு

Halley Karthik