முக்கியச் செய்திகள் தமிழகம்

சீனாவிலிருந்து கோவை வந்தவருக்கு கொரோனா உறுதி

சீனாவிலிருந்து சிங்கப்பூர் வழியாக கோவை வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனா, ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகளில் உருமாற்றமடைந்த பிஎஃப் வகை கொரோனா தொற்று பரவி வருகிறது. இதையடுத்து அனைத்து சர்வதேச விமானநிலையங்களிலும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நாடு முழுவதும் கடந்த 3 தினங்களில் 39 சர்வதேச பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சீனாவில் இருந்து மதுரை வந்த 2 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து துபாயில் இருந்த வந்த ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.இந்நிலையில் சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவை விமான நிலையம் வந்த சேலம் பயணிக்கு கொரோனோ தொற்று அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. இன்று கோவை பன்னாட்டு விமான நிலையம் வந்த பயணிகளில் 9 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் ஒருவருக்கு தொற்று அறிகுறியை கண்டறிப்பட்டுள்ளது

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஜவுளி வியாபாரி ஆவர். இதையடுத்து அவரை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நாடு முழுவதும் +2 வகுப்பு பொதுத்தேர்வு நடத்த ஆலோசனை!

இலவசமாக சிலம்பம் கற்றுத்தரும் பெண் டீ மாஸ்டர்!

Gayathri Venkatesan

ஒலிம்பிக் போட்டிகளைக் காண வெளிநாட்டவருக்கு அனுமதி மறுப்பு!

Niruban Chakkaaravarthi