முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மார்ச் -12 அமமுக வேட்பாளர் அறிமுகம்:டிடிவி தினகரன் அறிவிப்பு!

சென்னை ஒய்.எம்.சி.ஏ -மைதானத்தில் மார்ச் -12-ம் தேதி நடைபெறும் அமமுகவின் தேர்தல் பொதுகூட்டத்தில் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்படுவார்கள் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “அமமுகவின் தேர்தல் பொதுகூட்டம் வரும் மார்ச் 12-ம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் தேர்தலில் எங்களுடைய கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யவுள்ளோம். அதனைத் தொடர்ந்து எங்களுடைய தேர்தல் பிரச்சாரம் தொடங்கும்.

அரசியல் கட்சி தலைவர்கள் இலவசங்கள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகிறார்கள். ஏற்கனவே முதியோருக்கான ஓய்வூதியத்தை ஒழுங்காக தமிழக அரசால் வழங்கமுடியவில்லை. இதனைகேட்டால் நிதிபற்றாகுறை, கடன் சுமை, நிதிதட்டுபாடு என்கிறார்கள்.

ஆனால் தேர்தலுக்காக ஒவ்வொரு அரசியல் கட்சி தலைவர்களும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 கொடுப்பேன் என ஒருவரும் மற்றொருவர் ரூ.1,500 கொடுப்போம் என அறிவிக்கிறார்கள். சிலிண்டர் விலையை குறைக்க முடியாத அரசால் எப்படி ஆறு சிலிண்டர்களை வழங்கமுடியும்.இதுவெல்லாம் மக்களை ஏமாற்றுவதற்காக செய்யும் வேலை. எங்களுடைய தேர்தல் அறிக்கையில் என்ன இடம்பெறும் என்பதை பொருத்திருந்து பாருங்கள். நாங்கள் யாரையும் ஏமாற்ற விரும்பவில்லை. எங்களால் முடிந்ததைதான் நாங்கள் சொல்லுவோம். இலவசங்கள் என்ற பெயரில் மக்களை நாங்கள் ஏமாற்ற விரும்பவில்லை. நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் இரண்டு இடங்களில்போட்டியிடுகிறேன். ஆர். கே நகர் தொகுதியில் போட்டியிடுவீர்களா என்ற நிரூபர்களின் கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள். ஒவைசி கட்சிக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கியுள்ளோம். எங்களுடைய பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளது” என்றார்.

Advertisement:

Related posts

12-ம் வகுப்பு பொது தேர்வு தேதி அறிவிப்பு!

Niruban Chakkaaravarthi

தபால் வாக்குகள் எப்போது எண்ணப்படும்: தலைமை தேர்தல் அதிகாரி!

Jeba

கொரோனா சிகிச்சை மையமாக மாறிய மசூதி!

Karthick