முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கர்ப்பிணிக்கு ஆம்புலன்ஸில் பிறந்த இரட்டை குழந்தை!

நீலகிரியில் பிரசவத்திற்கு அழைத்துச் சென்ற பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்திலே இரட்டை குழந்தை பிறந்த சம்பவம் நடந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் நாடுகாணி பகுதியைச் சேர்ந்த அன்னபூரணி என்ற கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்படவே 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து சென்றனர்.

அப்போது அவருக்கு வாகனத்திலேயே ஒரு குழந்தை பிறந்துள்ளது. மற்றொரு குழந்தை உதகை அரசு மருத்துவமனையில் பிறந்தது. இதனிடையே கூடலூர் அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் இல்லாமல், உதகை செல்வதால் இதுபோன்று பிரசவம் ஏற்படுவதாக அந்த பெண்ணின் கணவர் பாண்டியராஜன் குற்றஞ்சாட்டினார்.

மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். தற்போது இரண்டு குழந்தைகளுடன் தாய் ஊட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement:

Related posts

கொரோனா அச்சத்தால் வீரர்கள் விலகல்: ஐபில் போட்டிகள் தொடர்ந்து நடைபெறுமா? பிசிசிஐ விளக்கம்

Karthick

மறு உத்தரவு வரும் வரை கட்டுப்பாடுகள் நீட்டிப்பு: தமிழக அரசு

Karthick

முதல்வராகும் ஸ்டாலினின் முதல் கையெழுத்து!