எங்களுடைய ஒரே இலக்கு, திமுக ஆட்சி அமையக் கூடாது: டிடிவி.தினகரன்

அமமுக தலைமையை ஏற்றால், அதிமுக-பாஜகவுடன் கூட்டணி வைப்பது குறித்து பேச தயார் என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயநகரில் உள்ள இல்லத்தில், சசிகலாவை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்,அமமுக தலைமையில்…

அமமுக தலைமையை ஏற்றால், அதிமுக-பாஜகவுடன் கூட்டணி வைப்பது குறித்து பேச தயார் என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராயநகரில் உள்ள இல்லத்தில், சசிகலாவை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்,
அமமுக தலைமையில் கூட்டணி அமையும் என்றார். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருப்பதாகவும், தங்கள் கட்சி சார்பில் போட்டியிட விருப்ப மனு வழங்கியவர்களுக்கான நேர்காணல் நாளை முதல் தொடங்குவதாவும் அவர் தெரிவித்தார்.

கூட்டணி உறுதியானவுடன் விரைவில் தெரிவிப்பேன் என்றும் அவர் கூறினார். மேலும், தங்களுடைய ஒரே இலக்கு திமுக ஆட்சி அமையக் கூடாது என்பதுதான் என்றும் டிடிவி.தினரகன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.