திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட மனக்காவலம்பிள்ளை நகர் அம்மா உணவகத்தில் முதியோர் ஒருவருக்கு இட்லி கேட்டபோது இல்லை என கூறிவிட்டு இரண்டு ரூபாய்க்கு பன்றிகளுக்கு இட்லி விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருநெல்வேலி மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் அம்மா உணவகம் செயல்பட்டு
வருகிறது இந்த அம்மா உணவகங்கள் மூலமாக கட்டிட தொழிலாளர்கள், பிற இடங்களில் பணிபுரிவோர், ஏழை எளிய மக்கள், சாலையோரங்களில் வசிப்பவர்கள் என பலர்
உணவிற்கு அம்மா உணவகங்களை நாடி வருகின்றனர்.

அம்மா உணவகங்களில் முன்பு தரமான உணவுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது உணவுகள் தரமற்ற முறையில் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனிடையே திருநெல்வேலி மாநகரத்திற்குட்பட்ட மனக்காவளம் பிள்ளை நகர் பகுதியில் அம்மா உணவகத்தில் முதியோர் ஒருவர் காலை உணவிற்கு இட்லி கேட்டபோது இட்லி இல்லை அனுப்பியுள்ளனர். அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து இட்லிகள் இரண்டு ரூபாய்க்கு பன்றிகளுக்கு உணவாக விற்கப்பட்டதான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருநெல்வேலி மாநகராட்சி திமுக ஏழாவது வார்டு உறுப்பினரான இந்திரா என்பவரின் கணவர் சுண்ணாம்புமணி என்பவர் பன்றிகளுக்கு உணவாக இட்லிகள் எடுத்துச்
செல்லப்படுவதை தடுத்தி நிறுத்தி சிலர் வீடியோ காட்சிகளாக பதிவு செய்துள்ளனர். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தரமான உணவுகள் வழங்கப்படாமல் உணவிற்காக வரும் காய்கறிகளை அங்குள்ள பணியாளர்கள் பங்கு போட்டு எடுத்துச் செல்வதாகவும் , காலை உணவான இட்லி மட்டுமல்லாது இதர உணவுகளும் பன்றிகளுக்கு உணவாக அனுப்பி வைக்கப்படுவதாகவும் சம்பந்தப்பட்ட குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை
நடவடிக்கை எடுக்கவில்லை அவர் தெரிவித்துள்ளார்.
உணவின்றி ஏராளமானோர் தவித்து வரும் நிலையிலும் மாநகராட்சியின் ஆதரவோடு செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் இருந்து உணவுகள் பன்றிகளுக்கு உணவாக விற்கப்படும் அவலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்







