2nd T 20 : தொடரில் முன்னிலை பெறப்போவது யார்…? – இந்தியா – இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்…!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி 20 போட்டி ஜூலை 1 ஆம் தேதி நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய இந்திய 7 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது. ஆனால் மழையால் பாதிக்கப்பட்டு இப்போட்டி கைவிடப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி மான்செஸ்டரில் இன்று நடைபெறுகிறது.

உத்தேச அணி விவரம்

இந்தியா

அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் (சி), திலக் வர்மா, சிவம் துபே, ஹர்ஷித் ராணா, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி மற்றும் பிரின்ஸ் யாதவ்.

இங்கிலாந்து

ஃபில் சால்ட், ஜோஸ் பட்லர், ஹாரி ப்ரூக் (கேப்டன்), ஜேக்கப் பெத்தல், டாம் பேன்டன், சாம் கர்ரன், வில் ஜாக்ஸ் லியாம் டாசன், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷித் மற்றும் ஜோஷ் டங்.

முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டதால், தொடரில் முன்னிலை பெற இரு அணிகளுமே இன்றைய போட்டியில் தீவிரமாகப் போராடும் என எதிர்பார்க்கலாம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.