முக்கியச் செய்திகள் விளையாட்டு

முதலாவது ஒரு நாள் போட்டி; இந்தியா-இலங்கை அணிகள் இன்று மோதல்!

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள், 3 ஒரு நாள் போட்களில் விளையாடுகிறது. இதில் டி20 போட்டியில் 1-2 என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்று கோப்பையை கைப்பற்றியது. இதையடுத்து இந்தியா-இலங்கை இடையிலான 3 ஒரு நாள் போட்டிகள் இன்று முதல் தொடங்குகிறது. முதல் ஒரு நாள் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பர்சபரா ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

டி20 போட்டிகளில் ஓய்வில் இருந்த கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோர் இந்த போட்டியில் அணியில் இடம்பெறுகிறார்கள். மீண்டும் முன்னணி வீரர்கள் அணியில் இடம் பெற்றிருப்பதால் இந்திய அணி வலுவடைந்துள்ளது.இந்திய அணியை பொறுத்தவரை கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல் என்ற நட்சத்திர வீரர்களின் அணிவகுப்பால் பேட்டிங்கில் பலம் பொருந்தியதாக திகழ்கிறது. ரோகித் சர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக சுப்மான் கில் களம் இறங்குகிறார். பந்து வீச்சில் அர்ஷ்தீப், முகமது சிராஜ், முகமது ஷமி, அக்ஷர் படேல், உம்ரான் மாலிக், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் மிரட்டுவார்கள்.

டி20 தொடரில் வெற்றி வாய்ப்பை இழந்த இலங்கை அணி ஒரு நாள் தொடரில் பதிலடி கொடுக்க முனைப்பு காட்டும். அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் குசல் மென்டிஸ், பதும் நிசாங்கா நல்ல நிலையில் உள்ளனர். மிடில் வரிசை பலவீனமாக உள்ள நிலையில் ஆல்-ரவுண்டர்கள் கேப்டன் ஷனகா, ஹசரங்கா நம்பிக்கை அளிக்கிறார்கள். ஒருங்கிணைந்து விளையாடினால் கடும் சவால் அளிக்கலாம். இந்திய மண்ணில் இதுவரை 10 நேரடி ஒரு நாள் தொடர்களில் ஆடியுள்ள இலங்கை அணி ஒன்றில் கூட தொடரை வென்றதில்லை.இந்திய அணியின் உத்தேச பட்டியலில், ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் அல்லது ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர் அல்லது யுஸ்வேந்திர சாஹல் அல்லது குல்தீப் யாதவ், அக்ஷர் பட்டேல், முகமது ஷமி, உம்ரான் மாலிக், முகமது சிராஜ் அல்லது அர்ஷ்தீப்சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை அணியின் உத்தேச பட்டியலில், குசல் மென்டிஸ் (விக்கெட் கீப்பர்), பதும் நிசாங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ, தனஞ்ஜெயா டி சில்வா, சாரித் அசலங்கா, தசுன் ஷனகா (கேப்டன்), ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, தீக்ஷனா, கசுன் ரஜிதா, மதுஷன்கா அல்லது லாஹிரு குமாரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

’உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இபிஎஸ்-க்கு தற்காலிக வெற்றி தான்’ – டிடிவி தினகரன்

G SaravanaKumar

விடாமுயற்சி, பெண் சுயமரியாதை பேசிய ‘சூரரைப் போற்று’

EZHILARASAN D

முதல்வராக பதவி ஏற்கும் ஸ்டாலினுக்கு பாதுகாப்பு அறிவிப்பு!

EZHILARASAN D