நாடாளுமன்ற தேர்தலில் அமமுக யாருடன் கூட்டணி? – டி.டி.வி.தினகரன் பரபரப்பு பேட்டி!

வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது தொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பேட்டி அளித்துள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளை ஒட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது…

வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது தொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பேட்டி அளித்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளை ஒட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது..

”சுற்றுச்சூழலுக்கும்,  கடல் வளத்திற்கும்,  மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படாமல் திமுக அவரது தலைவருக்கு தனியாக ஒரு இடத்தில் கட்சியின் நிதியை வைத்து நினைவுச்சின்னம் அமைப்பதைத்தான் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்

தொண்டர்களின் விசுவாசம் தான் ஒரு கட்சியின் அச்சாணி. என்னை கட்சியிலிருந்து நீக்கி 6 ஆண்டுகள் ஆகிறது. நான் தனி கட்சி தொடங்கிய ஆறு வருடம் ஆகிறது. கே.பி.முனுசாமி ஒரு பக்கம் உளறுகிறார், செல்லூர் ராஜு ஒரு பக்கம் பயத்தில் உளறுகிறார்.

கோடநாடு கொலை வழக்கில் ஜெயக்குமார் பற்றி நாங்கள் ஏதாவது பேசினோமா..?ஜெயக்குமார் ஏன் இதற்கு கருத்து தெரிவிக்க வேண்டும்.  தலையில் தொப்பி வைத்தால் எடப்பாடி பழனிச்சாமி எம்.ஜி.ஆர் ஆகிவிடுவாரா ?

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக நவம்பர் மாதத்தில் கூட்டணி தொடர்பாக முடிவு எடுப்போம். அது காங்கிரசுடனோ அல்லது பாஜக கூட்டணியிலோ இடம்பெறலாம். அல்லது  தனித்துக் கூட போட்டியிடலாம். அது குறித்து நவம்பரில் அறிவிப்போம்.” என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.