சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை; 3 விலைகளில் தக்காளி விற்பனை..!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் 3 வெவ்வேறு விலைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 180 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் தக்காளியின் விலையால்…

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் 3 வெவ்வேறு விலைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 180 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் தக்காளியின் விலையால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியின் விலை இன்றைய நிலவரப்படி 3 ரகங்களாக பிரிக்கப்பட்டு 130 ,150, 160 என்ற நிலையில் விற்கப்படுகிறது. சில்லறை விற்பனை கடைகளில் தக்காளி கிலோ 180 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வட மாநிலங்களில் மழையின் காரணமாக, தமிழகத்துக்கு தக்காளியின் வரவு குறைந்து வருவதால் தக்காளியின் விலை கடந்து ஒரு மாதமாக அதிகரித்து காணப்படுகிறது. தமிழக அரசு சார்பாக 500 நியாய விலை கடைகளில் தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று தக்காளியின் விலை 130 முதல் 160 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில் தக்காளி விலை அதிகமாக இருப்பதால் வியாபாரம் சுமாராக நடைபெறுவதாகவும், மக்கள் யாரும் அதிகமாக வந்து வாங்குவது கிடையாது என்றும்,  கடந்த வாரங்களில் தக்காளியின் விலை ரூ.150 முதல் ரூ.200 என்ற அளவில் விற்கப்பட்டது. தற்போது குறைந்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.

மேலும், வெளி மாநிலங்களில் தக்காளி பெட்டியின் விலை 2000 ரூபாய் விற்பனை செய்யப்பட்டாலும், நாங்கள் வாங்கும் விலையை விட இங்கு குறைவாக தான் மக்களுக்கு விற்பனை செய்து வருகிறோம். பொதுமக்கள் வழக்கமாக இரண்டு கிலோ வாங்குபவர்கள் அரை கிலோ ,ஒரு கிலோ என்ற அளவில் வாங்குகிறார்கள். எனவே இந்த தக்காளியின் விலையானது அடுத்த 5 அல்லது 10 நாட்களுக்குள் குறைய வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.