தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பணம் மேற்கோண்டுள்ளது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது. இதனை தொடர்ந்து நடைபெற்ற ஒரு நாள் தொடரி இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையே 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னணிலை வகிக்கின்றது.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேல் உடல் நலக்குறைவு காரணாமக விலகியுள்ளார். இதனால் மீதம் உள்ள 2 டி 20 போட்டிகளில் அவருக்கு பதிலாக ஷாபாஸ் அகமது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல்நலக்குறைவு காரணமாக தர்மசாலாவில் நடந்த மூன்றாவது டி20 போட்டியில் அக்சர் பட்டேல் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவிற்கு இடையிலான நான்காவது டி 20 போட்டி நாளை மறுநாள் (டிச.17) லக்னோவில் நடைபெற உள்ளது.







