‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’ தொடரின் கடைசி சீசனின் இரண்டாம் பாகத்திற்கான டிரெய்லர் வெளியீடு…!

‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’ வெப் தொடரின் சீசனின் இரண்டாம் பாகத்திற்கான டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

2016 ஆம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸில் வெளியான வெப் தொடர் ‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’. இந்த தொடரானது உலகளவில் பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்கள் வெளியாகின.

அதன் படி இந்த தொடரில் ஐந்தாம் மற்றும் கடைசி சீசனின் முதல் பாகமானது கடந்த நவம்பர் 27 ஆம் தேதி வெளியானது. அப்போது இத்தொடர் மீதான ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு மற்றும் ஆர்வம் மிகுதியால் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளமே முடங்கும் நிலை ஏற்பட்டது.

இந்த தொடரில் ஐந்தாம் சீசனின் இரண்டாம் பாகமானது வரும் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் இதன் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.