அருண் விஜயின் ‘ரெட்ட தல’ படத்தின் டிரெய்லர் வெளியானது….!

அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ’ரெட்ட தல’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

அருண் விஜய், நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘ரெட்ட தல’. இந்த படத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். கிரிஷ் திருக்குமரன் இயக்கியுள்ள இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளியான ‘கண்ணம்மா’ என்னும் பாடல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இப்பாடலை நடிகர் தனுஷ் பாடியிருந்தார்.

பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். ‘ரெட்ட தல’ படம் வரும் டிசம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.