நீட் தேர்வு தொடர்பான கருத்துகள் குறித்து ஏ.கே.ராஜன் விளக்கம்!

நீட் தேர்வு தொடர்பாக இதுவரை 25 ஆயிரம் கருத்துகள் பெறப்பட்டுள்ளதாக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை கண்டறிய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஆலோசனை…

நீட் தேர்வு தொடர்பாக இதுவரை 25 ஆயிரம் கருத்துகள் பெறப்பட்டுள்ளதாக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை கண்டறிய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்வி வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்குழுவின் தலைவர் ஏ.கே.ராஜன், கடந்த ஒரு வாரமாக பெறப்பட்ட தகவல்கள் குறித்து ஆலோசித்தோம் என கூறினார்.

இதுவரை 25 ஆயிரம் கருத்துகள் பெறப்பட்டுள்ளதாவும், அதில் கலவையான கருத்துகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தங்கள் குழுவுக்கு காலநீட்டிப்பு கேட்கப்பதற்கான சூழல் தற்போது இல்லை என்றும், தங்கள் குழுவினர்களுக்குள் மாற்று கருத்துக்கள் வர வாய்ப்பில்லை எனவும், அப்படி வந்தால் பெரும்பான்மைப்படி முடிவு எடுப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.