முக்கியச் செய்திகள் தமிழகம்

காவிரி ஆற்றில் விநாடிக்கு 10,000 கன அடி நீர் திறப்பு!

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில், விநாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கர்நாடக அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 124 அடி கொள்ளளவு கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு, நீர்வரத்து வினாடிக்கு 19,714 கன அடியாக இருப்பதால், நீர்மட்டம் 93 அடியை கடந்துள்ளது. இதேபோல், கபினி அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், இரு அணைகளில் இருந்தும், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து, வினாடிக்கு 5,401 கன அடி, மற்றும் கபிணி அணையிலிருந்து 5,000 கன அடி, என காவிரி ஆற்றில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

2 ஆடுகளை அடித்து கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை

Halley Karthik

பிரேசில் தடுப்பூசி ஒப்பந்தத்தில் முறைகேடு இல்லை: பாரத் பயோடெக் மறுப்பு

Halley Karthik

திறக்கப்பட்டது தாஜ்மஹால்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

Vandhana