முதலமைச்சரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் செயல்பாடுகள் என்ன என்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பொருளாதார மற்றும் சமூக கொள்கை, சமூக நீதி மற்றும் மனித மேம்பாடு தொடர்பான பிரச்சினைகள், குறிப்பாக பெண்களுக்கு சம வாய்ப்புகளை உறுதி செய்வது மற்றும் நல்வாழ்வு தொடர்பான விஷயங்களில் பொதுவான வழிகாட்டுதல்களை வழங்குதல்.
மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிப்பது குறித்த பரிந்துரைகளைச் செய்தல்.
மாநிலத்தின் ஒட்டுமொத்த நிதி நிலையை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வழங்குதல்.
மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க மாநில திறனை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்குதல்.
புதிய யோசனைகள் மற்றும் வளர்ச்சிக்கான தடைகளை களைய தீர்வுகளை வழங்குதல்.
முதலமைச்சர் அல்லது நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சரால் குறிப்பிடப்படும் பொருளாதார மற்றும் சமூகக் கொள்கையில் ஏற்படும் பிரச்னைகளை பகுப்பாய்வு செய்து ஆலோசனைகளை வழங்குதல்.







