பொங்கல் ரேஸில் இருந்து வெளியேறும் அஜித், போட்டியின்றி வெளியாகும் விஜய்யின் வாரிசு

விஜய்யின் வாரிசு படம் மட்டுமே பொங்கலுக்கு வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பண்டிகை நாள் என்றாலே பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகும் என்பது எழுதப்படாத விதியாகும். நம் தமிழ் திரைத்துறையில் பெரிய…

விஜய்யின் வாரிசு படம் மட்டுமே பொங்கலுக்கு வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பண்டிகை நாள் என்றாலே பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகும் என்பது எழுதப்படாத விதியாகும். நம் தமிழ் திரைத்துறையில் பெரிய ஹீரோக்களுக்கு பஞ்சமில்லாததால் அவ்வப்போது இரு பெரிய ஹீரோக்களின் படங்கள் ஒருநாளில் வெளியாவதெல்லாம் சிவாஜி -எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே நடந்து வருகிறது.

அந்த வரிசையில் தமிழில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் அஜித் மற்றும் விஜய் இதுபோன்ற பட ரிலீஸ்களை செய்து தங்களது ரசிகர்களை அவ்வப்போது உற்சாகப்படுத்துவதுண்டு. அந்த வரிசையில் 9 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இவர்களின் இரு படங்களும் ஒரே நாளில் வெளியாக இருப்பதாகத் தகவல்கள் உலாவி வந்தன
ஜில்லா மற்றும் வீரம் ஆகிய இருபடங்களும் 2014ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரே நேரத்தில் வெளியானது. இவ்விரு படங்களும் ரசிகர்களிடம் நேர்மையான விமர்சனங்களைப் பெற்று ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அதன் பின் தற்போது விஜயின் வாரிசு படமும் அஜித்தின் 61வது படமும் 2023 ஆண்டு பொங்கலுக்கு வெளியாகலாம் எனத் தகவல் உலாவியது.இதனால் இருவரின் ரசிகர்களும் கடந்த சில வாரங்களாக இணையத்தில் விஜயின் வாரிசு படத்திலும் அஜித்தின் 61வது படத்திலும் உள்ள பலம் மற்றும் பலவீனங்களைப் பற்றி சுவாரஸ்யமான விவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் விஜயின் வாரிசு படம் மட்டுமே பொங்கலுக்கு வெளியாகும் என தகவல்கள் வந்துள்ளன.

அஜித்தின் ஏகே-61 திரைப்படம் ஜனவரி இறுதி வாரத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு அல்லது பிப்ரவரி முதல் வாரத்திலோ வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளிவராத நிலையில் இப்படி ஒரு தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.