உலக நாடுகளுக்கிடையே ஒற்றுமை முக்கியம்- நடிகை பிரியங்கா சோப்ரா

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா உலக நாடுகளுக்கு இடையே ஒற்றுமை மிக முக்கியம் என ஐக்கிய நாடுகள் சபையில் பேசினார்.  பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஐக்கிய நாடுகள் பொது சபையில்…

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா உலக நாடுகளுக்கு இடையே ஒற்றுமை மிக முக்கியம் என ஐக்கிய நாடுகள் சபையில் பேசினார். 

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஐக்கிய நாடுகள் பொது சபையில் உரையாற்றினார். உலக நாடுகள் தற்போது சந்தித்து வரும் முக்கிய பிரச்னைகள் குறித்து அவர் பேசினார். அவர் தனது உரையில், உலகம் முழுவதும் ஏற்பட்ட கொரோனா தொற்றின் காரணமாக உலக நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்தன. மேலும் காலநிலை நெருக்கடியின் காரணமாக ஏற்படும் வாழ்க்கை சூழல் மாற்றம், வறுமை, பசிப்பட்டினி, சமத்துவமின்மை, போன்ற பிரச்னைகளுக்கு எதிராக உலக நாடுகள் நீண்ட நாட்களாக போராடி வருகிறது.

இந்த நெருக்கடிகள் ஏதோ சந்தர்பங்களால் உருவானவையல்ல. ஆனால் இவை திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை என்று தெரிவித்துள்ளார். உலகில் செய்ய வேண்டிய பட்டியல் உள்ளது. அதைச் செய்வதற்கான நேரம் இப்போது உள்ளது. மேலும் உலக நாடுகளுக்கு இடையே ஒற்றுமை மிகவும் முக்கியம் எனவும் தெரிவித்துள்ளார்.

உலக அமைதிக்காக போராடி நோபல் பரிசு பெற்ற மலாலாவை பிரியங்கா சோப்ரா ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் வைத்து சந்தித்து பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.