முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

’அந்த ஹீரோ படத்துல நான் நடிக்கலை’: ஐஸ்வர்யா ராஜேஷ் மறுப்பு

அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தில், தான் நடிக்கவில்லை என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

பிரபல தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுன். இவர் இப்போது ’புஷ்பா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்குகிறார். இது பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உட்பட சில மொழிகளில் உருவாகிறது. மெகா பட்ஜெட்டில் தயாராகும் இந்தப் படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக நடிக்கிறார்.

ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். செம்மரக் கடத்தல் தொடர்பான கதையை கொண்ட இந்தப் படத்தில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், அல்லு அர்ஜுன் சகோதரியாக நடிக்கிறார் என கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியானது. ஆனால், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தரப்பு அதைமறுத்துள்ளது.

சிவகார்த்திகேயனின் ’நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சகோதரியாக நடித்திருந்தார். இதையடுத்து அதே போன்ற கேரக்டரில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வருவதாகக் கூறப்படுகிறது.

அவர் இப்போது மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற ’தி கிரேட் இண்டியன் கிச்சன்’ ரீமேக்கில் நடித்து வருகிறார். ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் இந்தப் படத்தை அடுத்து முந்தானை முடிச்சு படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார்.

Advertisement:

Related posts

ஐந்து கிலோ மீட்டருக்கு தடுப்பணை கட்டப்படும்: ராமதாஸ்!

Ezhilarasan

விஜய் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்!

Karthick

கொரோனா பரவல்: மூன்று மாநிலங்களில் மத்திய குழு ஆய்வு!

L.Renuga Devi