மே தின நினைவுத் தூணுக்கு மு.க.ஸ்டாலின், மலர் தூவி மரியாதை!

மே தினத்தை முன்னிட்டு மே தின நினைவுத்தூணுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செய்தார். சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் மே தின கொண்டாட்டம் நடைபெற்றது. அங்கு அமைக்கப்பட்டிருந்த மே…

மே தினத்தை முன்னிட்டு மே தின நினைவுத்தூணுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செய்தார்.

சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் மே தின கொண்டாட்டம் நடைபெற்றது. அங்கு அமைக்கப்பட்டிருந்த மே தின நினைவுத் தூணுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மலர் தூவி மரியாதை செய்தார். அப்போது திமுக பொருளாளர் டி ஆர் பாலு, துணைப் பொதுச் செயலாளர் ஆ ராசா, அமைப்புச்செயலாளர் ஆர் எஸ் பாரதி, தொமுச பொதுச்செயலாளர் சண்முகம், பொருளாளர் நடராஜன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.