முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னையை அச்சுறுத்தும் காற்று மாசு

சென்னையில் கடந்த 2 ஆண்டுகளை விட அதிகமாக காற்று மாசு பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட காற்று மாசு காரணமாக தேசிய தலைநகர் டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் காற்று மாசு அதிகரித்தது.

மத்திய அரசின் காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு (SAFAR) வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின் படி டெல்லியில் காற்று மாசு அபாய கட்டத்தை எட்டியுள்ளது. காற்று மாசு PM2.5 என்கிற அளவீட்டில் கணக்கிடப்படுகிறது.

லோதி சாலை டெல்லியின் மிக முக்கியப்பகுதியாக கருதப்படுகிறது. இந்த பகுதியில் இன்று பிற்பகல் நிலவரப்படி PM2.5 அளவு 394 ஆக பதிவாகியுள்ளது. மேஜர் தியான் சந்த் தேசிய மைதானம் மற்றும் அமெரிக்க தூதரகம் பகுதியில் இந்த அளவு 416 மற்றும் 399 என பதிவாகியுள்ளது.

சென்னையை பொறுத்த அளவில், கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள காற்று மாசு குறித்த அட்டவணையில், கடந்த 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் தீபாவளியன்று பதிவான காற்று மாசைக் காட்டிலும் நடப்பாண்டில் அதிக அளவு காற்று மாசு பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு தீபாவளியன்று, சென்னையில் PM2.5 என்கிற அளவீட்டின்படி 62 என்று இருந்த காற்று மாசு, 51ஆக குறைந்தது. ஆனால், நடப்பாண்டில் இது 257 ஆக பதிவாகியுள்ளது. காற்று 201-300 என்கிற அளவில் மாசடைந்திருந்தால் காற்றில் நுண் துகள்கள் அதிகம் கலந்திருக்கிறது என்றும், இக்காற்று மோசமான அளவில் மாசடைந்துள்ளது என்று அர்த்தம். சென்னையில் நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, பெசன்ட் நகர் உள்ளிட்டப் பகுதிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்தமாக 60 என அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த 257ஆக பதிவாகியுள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டில் தீபாவளியன்று பதிவான காற்று மாசைக் காட்டிலும் அதிகமாகும்.

Advertisement:
SHARE

Related posts

சட்டமன்றத் தேர்தல் எப்போது நடைபெறும்: தலைமைத் தேர்தல் ஆணையர் பதில்!

Nandhakumar

அமெரிக்காவில் டிக் டாக் மீதான தடை நீக்கம்!

Vandhana

கோவையில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

Jeba Arul Robinson