முக்கியச் செய்திகள் தமிழகம்

நீண்ட நாட்களுக்கு பிறகு 900க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று 900க்கும் கீழ் பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 875 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,06,493 ஆக உயர்ந்துள்ளது. பல நாட்களுக்கு பிறகு கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 900க்கும் கீழ் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 13 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,204 ஆக அதிகரித்துள்ளது. தொற்றிலிருந்து ஒரே நாளில் 1,012 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,60,419 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் தற்போது 10,745 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டங்களில், சென்னை மற்றும் கோவையில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 106 பேருக்கு தொற்றுப் பாதித்துள்ளது. 132 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். கோயமுத்தூரில் 102 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 124 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

கருத்துக் கணிப்பு முடிவுகள்: மேற்கு வங்கத்தில் வெற்றி வாய்ப்பு எந்த கட்சிக்கு அதிகம்?

Gayathri Venkatesan

இன்று ரஜினிகாந்தை சந்தித்து நலம் விசாரிக்கிறார் கமல்ஹாசன்!

Jayapriya

பத்ம விருதுகளுக்கு சிபாரிசு: மக்களுக்கு மத்திய அரசு அழைப்பு

Saravana Kumar