“சங்கராச்சாரியார் சிலையை வடிவமைக்க நாளொன்றுக்கு 14-15 மணி நேரங்கள் உழைத்தோம்” – கர்நாடக சிற்பி

ஆதி சங்கராச்சாரியார் சிலையை வடிவமைக்க 9 மாதங்கள் உழைத்தேன் என சிலையை வடிவமைத்த சிற்பி கூறியுள்ளார். தீபாவளியின் மறுநாளான இன்று பிரதமர் மோடி, உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் கோயிலுக்கு சென்றார். அங்கு 12 அடி…

ஆதி சங்கராச்சாரியார் சிலையை வடிவமைக்க 9 மாதங்கள் உழைத்தேன் என சிலையை வடிவமைத்த சிற்பி கூறியுள்ளார்.

தீபாவளியின் மறுநாளான இன்று பிரதமர் மோடி, உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் கோயிலுக்கு சென்றார். அங்கு 12 அடி உயர ஆதிசங்கரர் சிலையை திறந்து வைத்து வழிபாடு செய்தார். சிறப்பு நிகழ்ச்சியாக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பூஜை நடத்தப்பட்டது. இவ்வாறு நடைபெற்ற பூஜைகள் கேதர்நாத் கோயிலுடன் இணைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி,

“பல ஆண்டுகளுக்கு முன் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்கள் கற்பனை செய்ய முடியாதவை. இதிலிருந்து கேதார்நாத் மீளுமா என்று பலரும் கருதினார்கள். ஆனால், என் உள்மனம் இப்புனித தலம் எப்போதையும் விட கூடுதல் பலத்தோடு எழுந்து நிற்கும் என்று கூறியது.” என்று குறிப்பிட்டார்.

கடந்த 2013ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது கேதார்நாத் பெருத்த சேதத்தை எதிர்கொண்டது. இதில் ஆதி சங்கராச்சாரியார் சிலையும் பாதிப்படைந்தது. அதன் பின்னர் தற்போது அந்த சிலை புனரமைக்கப்பட்டுள்ளது. இதைத்தான் பிரதமர் இன்று திறந்து வைத்தார்.

இத்தனை சிறப்பு பின்னணியை கொண்ட இந்த சிலையை கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த அருண் யோகிராஜ் தலைமையிலான குழு வடிவமைத்துள்ளது. இந்த சிலையை வடிவமைக்க தங்கள் குழு நாளொன்றுக்கு 14-15 மணி நேரம் கடுமையாக உழைக்க வேண்டி இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். 9 மாதங்களா நீண்ட இந்த பணி, தனக்கு கிடைத்த பெரும் பாக்கியம் என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.