முக்கியச் செய்திகள் தமிழகம்

40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும்: ஆர்.பி.உதயகுமார்

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியளித்தார்.

மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் 2.25லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவைகளுக்கு மின் கட்டண உயர்வு பேரிடியாக உள்ளது. மதுரைக்கு டைடல் பார்க் கொண்டு வரப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தது விளம்பர அறிவிப்பு எனவும், கள ஆய்வு நடத்தாமல் டைடல் பார்க் எப்படி கொண்டு வர முடியும் என்று குற்றம் சாட்டினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மதுரையில் ஏற்கனவே எல்காட் மூலம் உள்ள 2 தகவல் தொழில்நுட்ப பூங்கா முழுமையாக செயல்படுத்தவில்லை. போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள மதுரை மாட்டுத்தாவணி அருகே , அடிப்படை கட்டமைப்பு இல்லாத இடத்தில் டைடல் பார்க் அமைக்கப்படுவது சரியானதல்ல என்றும், முதலீட்டாளர்களிடம் கருத்து கேட்காமல் டைடல் பார்க் அறிவிக்கப்பட்டு உள்ளது என்றும் சாடினார்.

கண்ணின் பார்வையை அழித்து விட்டு ராஜபார்வை என சொல்லுவது போல டைடல் பார்க் அறிவிப்பு உள்ளது. திமுகவின் முப்பெரும் விழா ஸ்டாலினின் புகழ் பாடும் விழாவாக அமைந்து உள்ளது. டைடல் பார்க் கட்டுவது சிறுவர் பூங்கா அமைப்பது போல அல்ல, அனைத்து கட்டமைப்புகளையும் உள்ளடக்கி டைடல் பார்க் அமைக்க வேண்டும் என்றார்.

மேலும், இந்து இனத்தை அவதூறு பேசி வரும் அ.ராசா மீது திமுக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஒற்றை தலைமையில் அதிமுக செயல்பட்டு வருகிறது. அதிமுகவில் அதிமுகவிற்கு எதிராக உள்ளவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதனால், தமிழகத்தில் இனி எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறும், நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக வெற்றி பெறும் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மழை பாதிப்பை சரிசெய்ய அம்பத்தூர் மக்கள் கூறும் தீர்வு

Halley Karthik

4-ம் கட்ட முகாமில் 17.19 லட்சம் பேருக்கு தடுப்பூசி

Halley Karthik

பூஜையுடன் தொடங்கியது ’காசேதான் கடவுளடா’ ரீமேக்

EZHILARASAN D