இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய எம்.பி. ஆ.ராசாவுக்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா இந்துக்களை தரக்குறைவாக விமர்சித்திருந்தார். இதற்கு தொடர்ந்து இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்துக்கள் குறித்து அவதூறாகப் பேசிய எம்.பி. ஆ.ராசாவுக்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களை இழிவுபடுத்தும் விதமாக தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளர் திரு.ஆ.ராசா மிகவும் கீழ்த்தரமாக பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. மத உணர்வுகளைத் தூண்டும் இத்தகைய பேச்சுகளை அனுமதிப்பது சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்.
https://twitter.com/TTVDhinakaran/status/1571028649222217729
பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நாவடக்கம் தேவை. தி.மு.க அரசின் தோல்விகளைத் திசை திருப்புவதற்காகவே ராசா போன்றவர்களை பேசவிட்டு, முதலமைச்சர் ஸ்டாலின் வேடிக்கைப் பார்க்கிறாரோ? என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.








